நாகமலை புதுக்கோட்டையில் கார் டிரைவர் குத்திக் கொலை

மதுரை அருகே கார் டிரைவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகமலை புதுக்கோட்டையில் கார் டிரைவர் குத்திக் கொலை
Published on

நாகமலை புதுக்கோட்டை:

நாகமலை புதுக்கோட்டை ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் நாடோடி. இவரது மகன் கார்த்தி (வயது 25). திருமணம் ஆகவில்லை. கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை கார்த்தி மது குடித்து விட்டு வீட்டில் இருந்தார். அப்போது அங்கு 6 பேர் கும்பல் வந்தது. அவர்கள் திபுதிபுவென கார்த்தி வீட்டுக்குள் புகுந்தனர். கார்த்தியை தரதரவென வெளியே இழுத்து வந்து கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த கார்த்தியை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். கார்த்தியை குத்திக் கொன்ற கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com