பெரம்பலூரில் கார் மோதி ஒருவர் பலி

பெரம்பலூரில் கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

பாடாலூர்:

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா பருவளப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). இவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராம எல்லையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

பின்னர் அங்குள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு மீண்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தபோது, அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இது குறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com