ஆஷஸ் தொடரை வெல்ல ஒரு போட்டியைக் கூட மிஸ் செய்யக்கூடாது: கிளார்க் சொல்கிறார்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டுமென்றால், ஆஸ்திரேலியா ஒரு போட்டியைக் கூட மிஸ் செய்யக்கூடாது என்று கிளார்க் வலியுறுத்தியுள்ளார்.
ஆஷஸ் தொடரை வெல்ல ஒரு போட்டியைக் கூட மிஸ் செய்யக்கூடாது: கிளார்க் சொல்கிறார்
Published on

ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடுவதாக இருந்தது. இந்த பிரச்சினையால் தொடரை ரத்து செய்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

விரைவில் ஆஸ்திரேலிய சீனியர் அணி வங்காள தேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இது முடிந்த பின்னர், மிகப்பெரிய தொடரான ஆஷஸ் தொடர் நவம்பர் மாதம் வருகிறது. இது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு மானப்பிரச்சினை தொடராகும்.

முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டுமென்றால், ஆஸ்திரேலியா ஒரு போட்டியை கூட மிஸ் செய்யக்கூடாது என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com