வாட்ஸ்அப் வதந்தி: ரூ.1,099க்கு ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரிமுறை அமலாகியுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு வணிக நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்த நிலையில், ஹேக்கர்களும் தங்களது வியாபாரத்தை துவங்கியுள்ளனர்.
வாட்ஸ்அப் வதந்தி: ரூ.1,099க்கு ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்
Published on

புதுடெல்லி:

ஜி.எஸ்.டி. வரிமுறை அமலாவதற்கு முந்தைய விற்பனை இண்டர்நெட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் பரபரப்பாக நடைபெற்றது. பழைய வரிமுறையில் அறிவிக்கப்பட்ட சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் செலுத்திய நிலையில், வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் புதிய வதந்தி வேகமாக பரவி வருகிறது.

புதிய வதந்தியில் போலி இணையதளங்கள் மூலம் பிரபல பொருட்களுக்கு அதிக சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பரவும் போலி விளம்பரங்களில் சியோமி ரெட்மி நோட் 4 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மாடல்களில் முறையே ரூ.1,099 மற்றும் ரூ.1,299 விலையில் வாங்க முடியும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. 

இதேபோல் எச்.பி. நிறுவனத்தின் 16ஜிபி பென் டிரைவ் ஒரு ரூபாய்க்கும், ஜெ.பி.எல். நிறுவனத்தின் ப்ளூடூத் ஸ்பீக்கர் ரூ.59 மற்றும் பிலிப்ஸ் ட்ரிம்மர்கள் ரூ.6-க்கு வாங்க முடியும் என விளம்பரங்கள் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

போலி விளம்பரங்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன?

வாட்ஸ்அப் செயலியில் வேகமாக பரவும் போலி விளம்பரங்களில் உங்களை நம்ப வைக்க கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் நம்பகத் தன்மையை அதிகப்படுத்த போலி விளம்பரத்தில் அமேசானின் பிரீ-ஜி.எஸ்.டி. விற்பனைக்கான லோகோ இடம்பெற்றுள்ளது.  

விளம்பரங்களில் ஏமாறும் வாடிக்கையாளர்கள் அதை கிளிக் செய்து, அதிக விளம்பரங்கள் மற்றும் போலி லின்க்களை கொண்டுள்ள போலி தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இங்கு அவர்களின் முழு தகவல்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும்.

அடுத்து வாட்ஸ்அப்பில் பரப்பப்பட்ட போலி விளம்பரத்தை உங்களது காண்டாக்டில் உள்ள எட்டு வாட்ஸ்அப் குரூப்களுக்கு அனுப்ப வேண்டும், இந்த கட்டத்தில் போலி விளம்பரத்தை உண்மையென நம்பி மற்றவர்களுக்கும் நீங்கள் பரப்பி விடுகின்றீர்கள். 

இவை அனைத்தையும் முடித்த பின் உங்களுக்கான ஆர்டர் ஐ.டி. மற்றும் யு.சி. நியூஸ் செயலியை டவுன்லோடு செய்யக்கோரும் லின்க் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும். இந்த செயலியை டவுன்லோடு செய்ததும், உங்களுக்கான கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் அனுப்பப்படும். இது முற்றிலும் போலி என்பதால் நீங்கள் முன்பதிவு செய்த பொருள் உங்களுக்கு வராது. 

இறுதியில் உங்களது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஆட்-ஹாக் நிறுவனங்களுக்கு பணத்திற்காக பரிமாற்றி கொள்வர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com