தஞ்சையில் பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

தஞ்சையில் வீட்டில் தனியாக இருந்த பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சையில் பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை கோபால முதலியார்லைன் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 48). இவர் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நாராயணன் திடீரென விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நாராயணன் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து அவரது மனைவி ஜெயந்தி தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com