காங்கயம் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்- மில் மேலாளர் பலி

காங்கயம் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மில் மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

காங்கயம்:

காங்கயம் அருகே உள்ள பகவதி பாளையம்  பகுதியில் உள்ள ஒரு மில்லில் கல்யாணசுந்தரம் (வயது 39) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் காளிமுத்து (29) என்பவர் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் 2 பேரும் மில்லில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் காங்கயம் செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர். அந்த வழியாக ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சும் கல்யாண சுந்தரம் மற்றும் காளிமுத்து வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் 2 பேரையும் மீட்டு காங்கயம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம் பரிதாபமாக இறந்தார். 

 படுகாயம் அடைந்த காளிமுத்து மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com