பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு- பட்ஜெட்டில் அறிவிப்பு

பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #Budget2019 #BudgetSession #PiyushGoyal
பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு- பட்ஜெட்டில் அறிவிப்பு
Published on

பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பாஜக அரசு உஜ்வாலா திட்டத்தின்மூலம், 6 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். வரும் ஆண்டில் கூடுதலாக 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களில் 70 சதவீத பேர் பெண்கள் ஆவர். முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ராணுவத்திற்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரெயில் விபத்துக்கள் வெகுவாக  குறைந்துள்ளன.

நெடுஞ்சாலைகளை அமைப்பதில் உலகிலேயே மிகவேகமான நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. சராசரியாக தினமும் 27 கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.  சூரிய மின்சக்தி உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கும் ரெயில் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 மடங்கு அதிகரித்துள்ளது. விமானத்துறையில் வேகமான வளர்ச்சி இருப்பதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. செல்போன் உதிரிபாக உற்பத்தி அதிகரித்ததன் மூலம் வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது. ரூ.1 கோடி வரையிலான கடன்களுக்கு 3 சதவீத வட்டி கழிவு வழங்கப்படும்.

நாடு முழுவதும் ஆளில்லா ரெயில்வே கிராஸிங்குகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன.  கடந்த 5 ஆண்டுகளில் 34 கோடி ஜன்தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும். உள்நாடு வர்த்தகம் மற்றும் சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com