பட்ஜெட்: இறக்குமதி வரி அதிகரிப்பால் விலை உயரும் பொருட்கள்

மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் கார்கள், பைக்குகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை அதிகரிக்கிறது. #Budget2018 #UnionBudget #BudgetSession
பட்ஜெட்: இறக்குமதி வரி அதிகரிப்பால் விலை உயரும் பொருட்கள்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று 2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

அப்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு சுங்க வரியை அதிகரிக்கும் வகையில் அறிவித்துள்ளார். இதையடுத்து, கார்கள், பைக்குகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை அதிகரிக்க உள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் விலை அதிகரிக்கும் பொருள்கள்:

வைரம், தங்கம், வெள்ளி, கல் வைத்த நகைகள், சன்கிளாசஸ், சோயா புரோட்டின் உணவுகள், வாசனை திரவியங்கள், அழகுசாதன பொருள்கள், பல் மருத்துவ சாதனங்கள், டியோடரண்ட், லாரி மற்றும் பஸ்களின் டயர்கள், பட்டுத்துணிகள், காலணிகள், கவரிங் நகைகள், கடிகாரங்கள், மரச்சாமான்கள், பொம்மைகள், சிகரெட், மெழுகுவர்த்திகள், பட்டம் உள்பட பல்வேறு பொருள்களின் விலை அதிகரிக்கிறது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் விலை குறையும் பொருள்கள்:

முந்திரி பருப்பு, சூரிய தகடுகளை உற்பத்தி செய்யும் மூல பொருள்கள், காது கேட்கும் கருவிகள் உள்ளிட்ட பொருள்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் இதன் விலைகள் குறைகிறது. #Budget2018, #UnionBudget #BudgetSession #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com