காஷ்மீர்: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபர் சுட்டுக்கொலை

சர்வதேச எல்லைப்பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
எல்லை பாதுகாப்பு படையினர்
எல்லை பாதுகாப்பு படையினர்
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் அமைதியை குலைக்கும் வகையில் எல்லைப்பகுதி வழியாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயறித்து வருகின்றனர். அவர்களை தடுக்கும் முயற்சியில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் சம்பா செக்டார் பகுதியில் அமைந்துள்ள சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று இரவு 7.30 மணியளவில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து மர்மநபர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தார்.

பாகிஸ்தானியர் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவ முயற்சிப்பதை கண்டுபிடித்த இந்திய எல்லைப்பாதுகாப்பு படைனர் அந்த நபரை சுட்டுவீழ்த்தினர். 

இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவ முயன்ற நபர் பாகிஸ்தான் பயங்கரவாதியா? அல்லது பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புபடைபிரிவினரா? அல்லது பாகிஸ்தானை சேர்ந்த பொதுமக்களில் ஒருவரா? என்ற தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை.    

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com