ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிட் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 12-ந் தேதி ஓட்டெடுப்பு

ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார். #BrexitDeal #TheresaMay
ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிட் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 12-ந் தேதி ஓட்டெடுப்பு
Published on

லண்டன்:

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேவை வலியுறுத்தினர்.

ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார்.

அதே சமயம் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான ஐரோப்பிய கூட்டமைப்பு உடனான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார். #BrexitDeal #TheresaMay 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com