

ரோம்:
இங்கிலாந்தை சேர்ந்த 20 வயது மாடல் அழகி இத்தாலி சென்று இருந்தார். அங்குள்ள மிலன் நகரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது அவரை ஒரு மர்ம நபர் கடத்தி சென்றான்.
பின்னர் அவரை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் தனி அறையில் அடைத்து வைத்தான். 6 நாட்களாக தொடர்ந்து போதை மருந்துகள் கொடுத்து சித்ரவதை செய்தான்.
மேலும் ரூ.20 கோடி (3 லட்சம் அமெரிக்க டாலர்) பிணைத் தொகை வழங்க வேண்டும். இல்லாவிடில் மாடல் அழகியை இணையதளம் மூலம் ஏலத்தில் விற்பேன் என்றும் மிரட்டல் விடுத்தான்.
இதற்கிடையே கடத்தப்பட்ட மாடல் அழகியை தேடி வந்த போலீசார் மிலனில் ஏற்கனவே மூடப்பட்ட இங்கிலாந்து தூதரகம் அருகே மீட்டனர்.
இது தொடர்பாக மாடல் அழகியை கடத்திய மர்ம நபர் கைது செய்யப்பட்டான். போலந்து நாட்டை சேர்ந்த அவன் இரட்டை குடியுரிமை பெற்றவன். மாடல் அழகியை கடத்தியது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடைபெறுகிறது.