உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆசம்கர் பகுதியில் இன்று அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ambedkar
உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆசம்கர் பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் தலை மற்றும் கைகள் உடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தலைவர் சிலைகள் தொடர்ச்சியாக மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 6-ம் தேதி மீரட்டில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. #ambedkar #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com