கூடலூர் அருகே சிறுவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மாணவர் கைது

கூடலூர் அருகே சிறுவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது
கைது
Published on

கூடலூர்:

கூடலூர் கருணாநிதி காலனியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் தனது வீட்டு அருகே உள்ள 14 வயது சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த சிறுவன் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க இயலவில்லை.

சம்பவத்தன்று இந்த விபரம் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு தெரியவந்தது. இது குறித்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் தினகர பாண்டியன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை சிறார் சீர்திருத்த சிறையில் அடைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com