பண்ருட்டி அருகே 14 வயது சிறுமியை தாயாக்கிய காதலன் கைது

பண்ருட்டி அருகே ஆசைவார்த்தை கூறி 14 வயது சிறுமியை தாயாக்கிய காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி அருகே 14 வயது சிறுமியை தாயாக்கிய காதலன் கைது
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வானன் (வயது 20), கூலித் தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்தனர்.

இருவரும் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். அப்போது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை பலமுறை தமிழ்வாணன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து நடந்த விபரங்களை சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.

இதனை கேட்ட அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனது மகளின் நிலைக்கு காரணமான காதலன் தமிழ்வாணனை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் தமிழ்வாணன் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த தமிழ்வாணனை கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com