வங்காளதேசம்: ஆடை தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 9 பேர் பலி

வங்காளதேசத்தில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வங்காளதேசம்: ஆடை தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 9 பேர் பலி
Published on

டாக்கா:

வங்காளதேசத்தில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. ஆடை ஏற்றுமதியில்  சீனாவிற்க்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக தொழிலாளர்களை வங்காளதேசம் கொண்டுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 80% லாபத்தை ஆடை தொழிற்சாலை நிறுவனங்கள் பெற்று தருகின்றன.

இந்நிலையில், டாக்காவில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலையில் நேற்று எதிர்பாராத விதமாக கொதிகலன் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் உடல் கருகி பலி ஆகினர். இதனையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மேலும், பலர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com