அரியூர் அருகே மொபட் மீது மினி வேன் மோதியதில் காவலாளி பலி

அரியூர் அருகே மொபட் மீது மினிவேன் மோதியதில் காவலாளி இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறாகள்.
அரியூர் அருகே மொபட் மீது மினி வேன் மோதியதில் காவலாளி பலி
Published on

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் புதுநகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது75). இவர் அரியூர் சர்க்கரை ஆலையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து ராமகிருஷ்ணன் வீட்டுக்கு மொபட்டில் திரும்பி கொண்டு இருந்தார்.

சிவராந்தகம் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த மினிவேன் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதனால் ராமகிருஷ்ணன் சாலை அருகில் உள்ள வயிலில் தூக்கிவீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com