பீகார் சர்க்கரை ஆலை கொதிகலன் வெடித்து விபத்து - 5 பேர் பலி

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலை கொதிகலன் வெடித்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
பீகார் சர்க்கரை ஆலை கொதிகலன் வெடித்து விபத்து - 5 பேர் பலி
Published on

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் சாசா முசா சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்த 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களில் 9 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை கூடும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com