டெல்லியில் இருந்து பீகார் சென்ற பஸ், கார் மீது மோதி விபத்து: 6 பேர் பலி- 40 பேர் காயம்

டெல்லியில் இருந்து பீகார் சென்று கொண்டிருந்த பஸ், கார் மீது மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து
Published on

டெல்லியில் இருந்து பீகார் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று காலை ஐந்து மணி அளவில் பேருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கார் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தும், காரும் காலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தன.

இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கண்ணுஜ் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ள உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com