மதுரை தெற்குவாசலில் பீர் பாட்டிலால் வாலிபர் குத்திக்கொலை- நண்பர்கள் வெறிச்செயல்

மதுரை தெற்குவாசலில் குடிபோதையில் நண்பர்களால் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை தெற்குவாசலில் பீர் பாட்டிலால் வாலிபர் குத்திக்கொலை- நண்பர்கள் வெறிச்செயல்
Published on

மதுரை:

மதுரை கீரைத்துறை கிருதுமால் நதிக்கரை சாலையைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 17). திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்ற சூர்யாவிடம் கடன் வாங்கினார். அதை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தவில்லை.

இந்த நிலையில் தீபாவளி விடுமுறையில் சதீஷ்குமார் மதுரை வந்திருந்தார். அவரை முத்து போனில் தெற்குவாசலுக்கு வருமாறு அழைத்தார்.

தெற்குவாசல் பாலத்தின் கீழ் சதீஷ்குமாருடன், நண்பர்களான முத்து ஜெயபால், அண்ணாமலை, மோகன், மதியழகன் ஆகியோர் மது குடித்தனர்.

அப்போது கடனை முத்து திருப்பிக்கேட்டார். அதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம்-மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்து, சதீஷ்குமாரை பீர் பாட்டிலாலும், கத்தியாலும் குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன்பிறகு நண்பர்கள் ஓடிவிட்டனர்.

இது குறித்து தெற்குவாசல் போலீசுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்து உள்ளிட்ட நண்பர்கள் 5 பேரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com