ஆலங்காயம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

ஆலங்காயம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி வாணியம்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடந்தது.
விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி நடந்த போது எடுத்த படம்.
விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி நடந்த போது எடுத்த படம்.
Published on

திருப்பத்தூர்:

ஆலங்காயம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி வாணியம்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடந்தது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.

வேளாண்மை துணை இயக்குனர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கடலூரை சேர்ந்த தன்னார்வலர் சுதந்திரசெல்வன் தேனீ வளர்ப்பு வகைகள், முறைகள், தேன் அறுவடை செய்யும் தொழில்நுட்பம் பற்றி விளக்கி பேசினார். ஆலங்காயம் வேளாண்மை உதவி இயக்குனர் சோபனா வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜீவிதா காய்கறி மற்றும் பழவகை பயிர்களில் தேனீ வர்ப்பு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் லோகேஷ் செய்து இருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com