அக்டோபர் 23-ல் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல்: வினோத் ராய்

அக்டோபர் 23-ந்தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல் நடத்தப்படும் என கிரிக்கெட் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ
பிசிசிஐ
Published on

உச்சநீதிமன்றம் லோதா கமிட்டி பரிந்துரைகளை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அமல்படுத்த வினோத் ராய் தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகக்குழுவை நியமித்தது.

பிசிசிஐ தலைவராக இருந்து அனுராக் தாகூர், அந்த பதவியில் இருந்த விலகிய பின், இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. இறுதியில் அடுத்த மாதம் 21-ந்தேதி பிசிசிஐ-க்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது. இதனால் பிசிசிஐ-யின் முக்கிய உறுப்பினர் வினோத் ராய் மீது கடும் விமர்சனம் வைத்தனர். இந்நிலையில் அக்டோபர் 22-ந்தேதி நடைபெற இருந்து தேர்தலை 23-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அதற்கான காரணத்தையும் வினோத் ராய் தெரிவித்துள்ளார். அக்டோபர் 21-ந்தேதி மகாராஷ்டிரா உள்பட நான்கு மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் தேர்தல் நடத்தப்பட்டால் உறுப்பினர்களுக்கு குழப்பம் ஏற்படும். அதனால் ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com