வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை 225 ரன்னில் ஆல்அவுட்

டாக்காவில் நடைபெற்று வரும் வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 225 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. #BAVvSL
நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய அப்துர் ரசாக்
நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய அப்துர் ரசாக்
Published on

குசால் மெண்டிஸ், கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வங்காள தேசம் சுழற்பந்து வீச்சாளருடன் ஆட்டத்தை தொடங்கியது. கருணாரத்னே 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த தனஞ்ஜெயா டி சில்வா 19 ரன்னிலும், குணதிலகா 13 ரன்னிலும், சண்டிமல் ரன்ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.


அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ்

மறுமுனையில் விளையாடிய குசால் மெண்டில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 68 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பியனார்.

6-வது வீரராக களம் இறங்கிய ரோசன் சில்வா சிறப்பாக விளையாடினார். அவர் 56 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக அவுட்டாக இலங்கை அணி 65.3 ஓவரில் 222 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பந்து வீச்சாளர்களான தில்ருவான் பெரேரா 31 ரன்கள் எடுத்தும், அகிலா தனஞ்ஜெயா 20 ரன்கள் எடுத்தும் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தனர்.


நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய தைஜூல் இஸ்லாம்

X

Maalai Malar
www.maalaimalar.com