

500 ரன்களுக்கு மேல் குவித்ததால் வங்காள தேசம் அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை தக்க பதிலடி கொடுத்தது.
அந்த அணியின் குசால் மெண்டிஸ் (196), தனஞ்ஜெயா டி சில்வா (173) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 504 ரன்கள் குவித்திருந்தது. ரோசன் டி சில்வா 87 ரன்னுடனும், சண்டிமல் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோசின் சில்வா, சண்டிமல் ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ரோசன் சில்வா சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 109 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சண்டிமல் 87 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 62 ரன்களும், தில்ருவான் பெரேரா 32 ரன்களும், ஹெராத் 24 ரன்களும் அடிக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 199.3 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட் இழப்பிற்கு 713 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
முதல் இன்னிங்சில் வங்காள தேசத்தை விட 200 ரன்கள் முன்னிலைப் பெற்றது இலங்கை.
சண்டிமல்
முதல் இன்னிங்சில் 200 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இம்ருல் கெய்ஸ் 19 ரன்னிலும், தமிம் இக்பால் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு மொமினுல் ஹக்யூ உடன் முஷ்டாபிஜூர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய முஷ்டாபிஜூர் ரஹிம் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் ஆட்டமிழந்தார். ரஹிம் அவுட்டானதும் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
டிக்வெல்லா