வங்காளதேசம்: ஊழல் புகாரில் சிக்கிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ராஜினாமா

வங்காளதேசத்தில் ஊழல் புகாரில் சிக்கிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்காளதேசம்: ஊழல் புகாரில் சிக்கிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ராஜினாமா
Published on

தாகா:

வங்காளதேசத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா. இவர் தான் முதல் ஹிந்து தலைமை நீதிபதி ஆவார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளைத் தகுதி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தத்தை ரத்து செய்து நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா கடந்த ஜூலையில் தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு 

காரணமாக நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா நீண்ட விடுப்பில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.

விடுமுறையில் சென்ற சில தினங்களிலேயே நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா மீது கருப்புப் பணம், நிதி முறைகேடு, ஊழல், சட்ட நெறி தவறியது தொடர்பாக 11 புகார்கள் எழுப்பப்பட்டது. அந்தப் புகார்கள் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருகிறது.

அதிபர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள கடிதம் ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறினர்.

நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com