ஆட்டோவில் பெட்ரோலை ஊற்றிய போது தீ- டிரைவர் பலி

சென்னையில் ஆட்டோவில் பெட்ரோலை ஊற்றிய போது சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த டிரைவர் தீயில் கருகி உயிரிழந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

அரியலூர் மாவட்டம் மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்குடிமகன் (34). ஆட்டோ டிரைவர்.

இவர் சென்னையில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று காலை தமிழ்குடிமகன் பாரிமுனையில் இருந்து தரமணி ஸ்ரீராம் நகருக்கு சவாரிக்காக சென்றார்.

அப்போது பெட்ரோல் இல்லாமல் ஆட்டோ நடுவழியில் நின்றது. இதனால் ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்தார். அதை ஆட்டோவில் ஊற்றினார்.

அப்போது சிகரெட்டும் புகைத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக சிகரெட்டில் இருந்த தீ பாட்டில் மீது விழுந்தது. இதில் பெட்ரோல் தீப்பிடித்து எரிந்தது. இதில் பதட்டம் அடைந்தஅவர் பெட்ரோலை கீழே ஊற்ற முயன்றார்.

அப்போது பெட்ரோல் அவரது உடலில் சிதறி தீப்பிடித்தது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அனைத்து தமிழ்குடிமகனை ராயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com