செங்கோட்டையில் குண்டாறு அணை - அருவிகளை பார்வையிட்ட வாட்சன்

செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணைக்கு வந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வாட்சன், அணைப்பகுதியில் உள்ள கோபால் அருவிக்கு ஜீப்பில் சென்று அதன் அழகை கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
கிரிக்கெட் வீரர் வாட்சன் அருவியின் முன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி.
கிரிக்கெட் வீரர் வாட்சன் அருவியின் முன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி.
Published on

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணையின் மேல் பகுதியில் ஏராளமான தனியார் அருவிகள் உள்ளன. மழை காலங்களில் அந்த அருவிகளில் கொட்டும் தண்ணீரே குண்டாறு அணைக்கு வருகிறது.

அந்த அருவிகளுக்கு மலையில் கரடு முரடான பாறைகளின் மீது ஜீப் மூலமே சென்று வர முடியும். மழை மற்றும் குற்றால சீசன் காலத்தில் இந்த அருவிகளுக்கு ஏராளமானோர் வந்து செல்வார்கள். இந்த நிலையில் குண்டாறு அணை மற்றும் அருவிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வாட்சன் வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி குண்டாறு அணைக்கு வந்து அப்பகுதியில் உள்ள அருவிகளில் குளித்து விட்டு சென்றார். இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வாட்சன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com