ஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது: மார்கஸ் ஸ்டாய்னிஸ்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரை வென்ற பிறகு, ஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது என மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார். #WorldCup2019
ஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது: மார்கஸ் ஸ்டாய்னிஸ்
Published on

ஆனால் உலகக்கோப்பைக்கு முன் நடைபெற்ற இந்தியா (3-2) மற்றும் பாகிஸ்தான் (5-0) அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிது. தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி பெற்றது.

இதனால் ஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது என அந்த அணியில் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள ஒவ்வொருவரும் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக நான் உணர்கிறேன். வெளிநாட்டு மண்ணில் 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளோம். இது எங்களுக்கு மிகமிக முக்கியம். இது எங்களுக்கு தேவைப்பட்டது. இதற்கு முன் நாங்கள் ஏராளமான போட்டிகளில் தோல்வியடைந்துள்ளோம்.

இது எங்களுக்கு நல்ல நேரம். ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடங்க வேண்டும். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக தொடங்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com