சாத்தான்குளம் அருகே மளிகை கடை உரிமையாளர் மீது தாக்குதல் - 4 பேருக்கு வலைவீச்சு

சாத்தான்குளம் அருகே மளிகை கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பகுதியை சேர்ந்தவர் ஜெயசுந்தர் ஜேம்ஸ் (வயது 38). இவர் கருங்கடல் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் கிறிஸ்தவ ஆலயத்தில் வாலிபர் சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தை அதே பகுதியை சேர்ந்த அப்பல்லோ என்பவர் நடத்தி வருகிறார். அதற்கான கணக்குகளை அவர் நேற்று ஒப்படைத்தார்.

அப்போது அந்த கணக்கில் குறைபாடு உள்ளது என கூறி பீட்டர் பிரபாகர் என்பவர் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே அப்பல்லோ, பைசன் கஸ்துவேல், ஐசக், யாக்கோபு ஆகியோர் சேர்ந்து பீட்டர் பிரபாகரை அடித்து உதைத்தனர். இதனை ஜெயசுந்தர் ஜேம்ஸ் தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவரையும் அடித்து உதைத்துள்ளனர்.

பின்னர் இது குறித்து ஜெயசுந்தர் ஜேம்ஸ் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com