சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்- சிறுவன் கைது

சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்- சிறுவன் கைது
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளத்தை சேர்ந்தவர் சண்முகையா மகன் கோகுல் (வயது 20). இவர் சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். 

சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் சேர்ந்து மலையாங்குளம் மில் எதிரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தாராம். அங்கு அதே ஊரை சேர்ந்த குருசாமி மகன் மதுசூதனன் (16) தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது மதுசூதனன் கோகுலின் நண்பரிடம் வெளியூர்காரன் இங்கு வந்து எப்படி சாப்பிடலாம் என கேட்டுள்ளார். இதை கோகுல் தட்டி கேட்டுள்ளார். 

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மதுசூதனன், அவரது நண்பர்கள் கருத்தானூரை சேர்ந்த இளங்கோ, இலந்தை குளத்தை சேர்ந்த சாமுவேல், மலையாங்குளத்தை சேர்ந்த மன்மதன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து கோகுலை அடித்து தாக்கி உதைத்துள்ளனர். 

 இதில் காயமடைந்த கோகுல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குருவிகுளம் போலீசார் மதுசூதனனை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com