மதுரையில் தாய்-மகன் மீது தாக்குதல்

மதுரையில் தாய்-மகன் மீது தாக்குதல் நடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல்
தாக்குதல்
Published on

மதுரை:

மதுரை கே.புதூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 34). இவர், கார்களை வாங்கி விற்று வருகிறார். இதற்காக வீட்டு முன்பு சில கார்களை நிறுத்தியிருந்தார்.

இதற்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த மனோஜ் (40) எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று மனோஜ் காரை எடுக்கும்படி திருப்பதியிடம் கூறினார். இதில் ஏற்பட்ட தகராறில் திருப்பதி மற்றும் அவரது தாயார் தாக்கப்பட்டதாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் காயமடைந்த திருப்பதி அவரது தாயார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com