

இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பரபரப்பாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் நெருக்கடியை சிறப்பாக கையாளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பகர் சமான் கூறுகையில் ‘‘ஒவ்வொரு சர்வதேச போட்டியிலும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் வித்தியாசமான பந்து விளையாட்டு ஆகும். என்னை பொறுத்தவரையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின்போது நெருக்கடியை சமாளிக்கும் அணிக்கே வெற்றி கிட்டும்.
நாங்கள் இந்தியாவை விட சற்று முன்னணியில் இருக்கிறோம். ஏனென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸை நாங்கள் சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறோம். அதனால் எங்களுக்கு அதிக அனுபவம் உள்ளது.