குருகிராமம் பள்ளி மாணவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேருந்து நடத்துநர் விடுவிக்கப்பட்டார்

குருகிராமம் பள்ளி மாணவன் பிரத்யுமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேருந்து நடத்துநர் அசோக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
குருகிராமம் பள்ளி மாணவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேருந்து நடத்துநர் விடுவிக்கப்பட்டார்
Published on

டெல்லி அருகே குருகிராமத்தில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த பிரதியுமன் (வயது 7) என்ற மாணவன் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தான். இதுதொடர்பாக அந்த பள்ளியின் பேருந்து நடத்துனரான அசோக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். சிறுவனை அந்த நடத்துனர் பாலியல் தொந்தரவு செய்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, அந்த பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவனை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பள்ளியில் நடைபெற இருந்த தேர்வை ஒத்திவைக்கும் நோக்கத்தில் இந்த கொலையை அந்த மாணவன் செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. 16 வயதான அந்த மாணவனிடம் இருந்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் அதிகாரிகள் கைப்பற்றினர். குருகிராமம் போலீசார், நடத்துநரை இந்த வழக்கில் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com