பென் ஸ்டோக்ஸ் உலக அணிகள் அஞ்சக்கூடிய வகையிலான வீரர்: மெக்ராத்

ஒரே நாளில் உச்சத்தை தொட்ட பென் ஸ்டோக்ஸ் உலக அணிகள் அஞ்சக்கூடிய வகையிலான வீரர் என்று மெக்ராத் தெரிவித்துள்ளார்.
மெக்ராத், பென் ஸ்டோக்ஸ்
மெக்ராத், பென் ஸ்டோக்ஸ்
Published on

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் ஹெட்டிங்லேயில் நடைபெற்றது. 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து, பென் ஸ்டோக்ஸின் நம்ப முடியாத வகையிலான அபாரமான ஆட்டத்தால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதனால் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சாதனையாளராகியுள்ளார். இந்நிலையில் உலக அணிகள் அஞ்சக்கூடிய வகையிலான வீரர் என்று மெக்ராத் புகழாரம் சூட்டியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் குறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘பென் ஸ்டோக்ஸ் உலக அணிகள் அஞ்சக்கூடிய வகையிலான வீரர். அவர் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். ஆட்டத்தில் கவனம் செலுத்தி மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடி தேவைப்படும்போது அதிரடியாக பேட்டிங் செய்து அணியை அவரால் மீட்க முடியும்.

மேலும் ஒருநாள் முழுவதும் அவரால் சிறப்பாக பேட்டிங் செய்யவும், பந்து வீசவும் முடியும். தலைசிறந்த பீல்டரும் கூட. அவர் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் என்பதை எளிதாக கூற இயலும். அவர் செய்த சாதனைகளுக்கு இணையான யாரும் நெருங்கி வரவில்லை’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com