ஆர்யன் கான் கைது திட்டமிட்ட சதி: மகாராஷ்டிர மாநில மந்திரி சொல்கிறார்

சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு என்.சி.பி. காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
நவாப் மாலிக்
நவாப் மாலிக்
Published on

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்.

இவரை நாளை வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த மும்பை நீதிமன்றம் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு அனுமதி அளித்தது. நாளை வரை என்.சி.பி. காவலில் ஆர்யன் கான் இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து இதுவரை அரசியல் தலைவர்கள் வாய் திறக்காமல் இருந்தனர். இந்த நிலையில் முதன்முறையாக மகாராஷ்டிர மாநில மந்திரி நவாப் மாலிக் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஆர்யன் கான் கைது குறித்து அவர் கூறுகையில் ‘‘கடந்த ஒரு மாதமாக கிரைம் நிருபர்களிடையே, அடுத்த இலக்கு ஷாருக்கான்தான் என்ற செய்தி உலாவிக் கொண்டே இருந்தது.

இந்த சமயத்தில் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது திட்டமிட்ட சதி’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com