கொரோனா தொற்று இல்லை... சிறையில் பொது அறைக்கு மாற்றப்பட்ட ஆர்யன் கான்

ஆர்யன் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
ஆர்யன் கான்
ஆர்யன் கான்
Published on

மும்பை:

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து அவர் மும்பை ஆர்தர்  ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள் அமலில் இருப்பதால், ஆர்யன் கான் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட 5 நபர்கள் சிறையில் உள்ள தனிமை அறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆர்யன் கான் மற்றும் 5 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் பொது அறைக்கு மாற்றப்பட்டனர்.  

இதற்கிடையே ஆர்யன் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com