ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா கட் செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று பகல் 11 மணிக்கு அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்து வீர மரணம் அடைந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com