சங்கரன்கோவிலில் காதலியை திருமணம் செய்ய மறுத்த ராணுவவீரர் கைது

சங்கரன்கோவிலில் காதலியை திருமணம் செய்ய மறுத்த ராணுவவீரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நெல்லை:

சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்தவர் சிவனையா. இவரது மகன் கோட்டைக்குமார் (வயது26). இவர் ராணுவ வீரராக உள்ளார். தற்போது விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள நயினார்புரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

2 பேரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர். இதனால் அவரது காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோட்டைக்குமாரிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு கோட்டைக்குமார் திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் அந்த இளம்பெண் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணை நடத்திய மகளிர் போலீசார் கோட்டைக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com