எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறல்: துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ மேஜர் - 3 வீரர்கள் பலி

காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ மேஜர் மற்றும் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறல்: துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ மேஜர் - 3  வீரர்கள் பலி
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கெரி செக்டாரில் இன்று மதியம் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ மேஜர் மற்றும் 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ மேஜர் மற்றும் 3 வீரர்கள் பலியாகினர். தொடர்ந்து இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com