பிடிக்கவில்லை என கூறிய பெண் வீட்டார் - ரெயில் முன் பாய்ந்து ராணுவ வீரர் தற்கொலை

பெண் பார்க்க சென்று பெண்ணை பிடித்துப் போய் கல்யாண கனவுடன் இருந்த ராணுவ வீரரை பிடிக்கவில்லை என பெண் வீட்டார் கூறியதால், மனம் உடைந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
பிடிக்கவில்லை என கூறிய பெண் வீட்டார் - ரெயில் முன் பாய்ந்து ராணுவ வீரர் தற்கொலை
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் கத்வால் மாவட்டத்தைச் சேர்ந்த ரெவுலாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் குமார். ராணுவத்தில் பணியாற்றும் இவர் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார். மகனுக்கு திருமண செய்து பார்க்க நினைத்த பெற்றோர் சமீபத்தில் ஒரு பெண்ணை பார்க்க சென்றுள்ளனர்.

பெண்ணை வினோத் குமாருக்கு மிகவும் பிடித்து போனது. ஆனால், பெண் வீட்டார் வினோத் குமாரை பிடிக்கவில்லை என கூறிவிட்டனர். இதனால், மனம் உடைந்து போன வினோத் குமாரிடம், வேறு பெண்ணை பார்க்கலாம் என அவரது தந்தை சமாதானம் தெரிவித்துள்ளார்.

ஆனால், பெண்ணை மிகவும் பிடித்து போய் திருமண கனவில் இருந்த வினோத் குமார், அதே பெண்ணை தான் திருமணம் செய்வேன் என கூறி தந்தையிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை ரெயில் முன்னர் பாய்ந்து வினோத் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com