அரியலூர் மாவட்டத்தில் வாகன விதிமுறைகளை மீறிய 882 பேர் மீது வழக்கு

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளை மீறிய 882 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் வாகன விதிமுறைகளை மீறிய 882 பேர் மீது வழக்கு
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்பட வாகன விதிமுறைகளை மீறியதாக 882 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசார் அபராதமாக வசூலித்தனர். தொடர்ந்து இனி வரும் காலங்களில் இதே போன்று வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com