அரக்கோணம் அருகே குளத்தில் தவறி விழுந்தவர் பலி

அரக்கோணம் அருகே குளத்தில் தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரில் மூழ்கி பலி
நீரில் மூழ்கி பலி
Published on

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த குருவராஜப்பேட்டை கிராமத்தில் உள்ள தங்கசாலை சந்து தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 47), மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் நேற்று கணேசன், வளையல்கார குளத்தில் கை, கால்கள் கழுவும் போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com