வேலூர் மாவட்டத்தில் 2 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்

வேலூர் மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் 2 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள 2 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள பழங்குடியினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும்.

விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் தங்களது விண்ணப்பங்கள் முழு வெள்ளைத்தாளில் முழு முகவரி, கைபேசி எண் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் வருகிற 28-ந்தேதிக்குள் திருப்பத்தூர் தனி தாசில்தார் அலுவலக வளாகத்தில் இயங்கும் திட்ட அலுவலர் அலுவலகத்தில் அளிக்குமாறு கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com