

அன்னூர்:
அன்னூர்- கோவை ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே இன்று காலை அந்த பகுதி மக்கள் சென்றனர். அப்போது புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள் அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது வெள்ளை துணியால் சுற்றப்பட்டு பிறந்து 1 அல்லது 2 நாட்களே ஆன பெண் சிசு கிடந்தது. அந்த பகுதி மக்கள் இதுகுறித்து ஆம்புலன்ஸ் மற்றும் அன்னூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த அன்னூர் போலீசார் பெண் சிசுவை மீட்டு ஆம்புலன்சில் அன்னூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசிச்சென்ற தாயை தேடி வருகிறார்கள். கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதால் அதன் தாய் வீசினாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.