

சேலம்:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெய்சி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் சித்திரை செல்வி, மாநில துணைத் தலைவர் சரோஜா மற்றும் நிர்வாகிகள், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 9 மாதம் பிரசவ விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.