ஆண்டிப்பட்டி அருகே பொதுப்பாதை பிரச்சினையில் இரு தரப்பினர் மோதல்

ஆண்டிப்பட்டி அருகே பொதுப்பாதை பிரச்சினையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரு தரப்பினர் மோதல்
இரு தரப்பினர் மோதல்
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள அரப்படிதேவன் பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது51). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்னவீரன் (43) என்பவருக்கும் பொதுப்பாதை பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரு குடும்பத்தினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். சின்னவீரன், அவரது மனைவி செல்வராணி, மகள் சாக்ஷி ஆகியோர் தாக்கியதில் ராமரின் மனைவி பாக்கியம் படுகாயம் அடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக க.விலக்கு போலீஸ் நிலையத்தில் பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் சின்னவீரனை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ராமர் குடும்பத்தினர் தாக்கியதாக சாக்ஷி புகார் அளித்தார். அதன்பேரில் ராமர் மற்றும் அவரது மகன் அழகரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com