ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்த ராணுவ வீரர் கைது

ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
பாண்டீஸ்வரன்
பாண்டீஸ்வரன்
Published on

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வரு‌ஷநாடு சிங்கராஜ புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவரது 17 வயது மகள் பிளஸ்-1 படித்து வந்தார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் (26) என்பவர் காதலிப்பதாக கூறி ஆசையாக பழகி வந்துள்ளார்.

பாண்டீஸ்வரன் புனேயில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவியின் பெற்றோருக்கு தெரியாமலேயே அவரை கடத்திச் சென்று கடமலைக் குண்டுவில் திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கணேசன் அதிர்ச்சியடைந்தார். வரு‌ஷநாடு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த ராணுவ வீரர் பாண்டீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com