அம்பேத்கர் சிலை உடைப்பு: ஊத்துக்கோட்டையில் கண்டன ஆர்பாட்டம்

வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டித்து ஊத்துக்கோட்டையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டம்
ஆர்பாட்டம்
Published on

ஊத்துக்கோட்டை:

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே கண்டன ஆர்பாட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவ கொலைகள் மற்றும் தீண்டாமை முறைகளை தடுக்க தவறிய அரசை கண்டித்தும், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் நடந்த இந்த ஆர்பாட்டத்துக்கு தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். 

இதில் அமைப்பின் தலைவர் எழிலரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com