காஷ்மீர்: 4 துப்பாக்கிகளுடன் போலீஸ் கான்ஸ்டபிள் தலைமறைவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பட்காம் மாவட்டத்தில் இந்திய உணவுக் கழகம் கிட்டங்கியில் இருந்து 4 தானியங்கி துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர்: 4 துப்பாக்கிகளுடன் போலீஸ் கான்ஸ்டபிள் தலைமறைவு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மத்திய பகுதியில் உள்ள பட்காம் மாவட்டத்தில் இந்திய உணவுக் கழகத்துக்கு சொந்தமான கிட்டங்கி ஒன்றுள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போலீஸ்காரரான சையத் நவீத் முஸ்தாக் என்பவர் நேற்று மாலை இங்கு வைக்கப்பட்டிருந்த நான்கு தானியங்கி ரக (எஸ்.எல்.ஆர்.) துப்பாக்கிகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றது பின்னர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, சோபியான் மாவட்டத்தை சேர்ந்த சையத் நவீத் முஸ்தாக் கலவரக் காடாக மாறிவரும் தெற்கு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில்  அருகாமையில் இருக்கும் புல்வாமா, பட்காம், சோபியான் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்படுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com