நாங்குநேரி அருகே மதுபாட்டில் பதுக்கியவர் கைது

நாங்குநேரி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில் பதுக்கியவரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜி மற்றும் போலீசார் பற்பநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஞானபிரகாசம் மகன் ஜேசுராஜன் (வயது 49) என்பவர் அதிக விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள், ரூ.100 பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com