புதுவையில் இருந்து சென்னைக்கு மது பாட்டில் கடத்திய தந்தை- மகன் கைது

தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய தந்தை - மகன் கைது செய்யப்பட்டனர். மது பாட்டில் - கார் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுவையில் இருந்து சென்னைக்கு மது பாட்டில் கடத்திய தந்தை- மகன் கைது
Published on

சேதராப்பட்டு:

கோரிமேடு அடுத்த பட்டானூர் மதுவிலக்கு சோதனை சாவடியில் இன்று காலை மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில 48 அட்டை பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து டிரைவரையும், அருகில் இருந்த வரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 42)என்பதும், உடன் இருந்தவர் அவரது மகன் ரமேஷ் (18) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், மதுபாட்டில் கடத்திய காரையும் பறிமுதல் செய்தனர். காரின் மதிப்பு ரூ. 10 லட்சம்.

அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில் வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்க வாங்கி சென்றது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com